தகராறில் ஈடுபட்டதாக பா.ஜ.க. கவுன்சிலர் உள்பட 8 பேர் மீது வழக்கு


தகராறில் ஈடுபட்டதாக பா.ஜ.க. கவுன்சிலர் உள்பட 8 பேர் மீது வழக்கு
x

தகராறில் ஈடுபட்டதாக பா.ஜ.க. கவுன்சிலர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

நடையனூர் அருகே சொட்டையூர் பகுதி சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 33). இவர் வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேலாயுதம்பாளையம் மலைக்காவலன் தெருவை சேர்ந்த பா.ஜ.க. கவுன்சிலர் கோபிநாத் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தீனசேனன், பூபதி, விஜயராகவன், விக்னேஷ், இளையராஜா ஆகிய 6 பேரும் ஜெயராஜை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில், காயமடைந்த ஜெயராஜ் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து 2 தரப்பினரும் தனித்தனியாக வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், தீனசேனன், கோபிநாத், பூபதி, விஜயராகவன், விக்னேஷ், இளையராஜா, ஜெயராஜ், சித்திக் ஆகிய 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story