நூதன முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பா.ஜ.க.வினர்
நூதன முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூர்
வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக 75-வது ஆண்டு சுதந்திர தின விழா குறித்து வேலூர் கோட்டையில் நூதன முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோட்டையின் மதில்சுவரில் பா.ஜ.க.வினர் ஒன்றாக கூடி நின்று கைகளில் தேசிய கொடிகளை ஏந்தி கோஷமிட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் மாவட்ட பொது செயலாளர்கள் ஜெகநாதன், பாபு, கவுன்சிலர் சுமதி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, கோட்டையை சுற்றி பார்க்க வந்த வடமாநில சுற்றுலாப் பயணிகளும் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் கையிலும் தேசியக்கொடி கொடுக்கப்பட்டது. அவர்களும் அதை ஏந்திக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story