தி.மு.க.வை கண்டித்து பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தி.மு.க.வை கண்டித்து பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஊட்டி
தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு, தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத நினைக்கிறது என்று கூறி நீலகிரி மாவட்ட பா.ஜனதா சார்பில் ஊட்டி ஏ.டி.சி., திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் தமிழை வளர்ப்பதாக கூறி தி.மு.க., நாடகமாடுகிறது. தி.மு.க., பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை நம்ப வைத்துள்ளது.தமிழகத்தில் திராவிடத்தால் தான் தமிழை வளர்க்க முடியும் எனக் கூறி வரும் தி.மு.க., மக்கள் நலனுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆன்மிக வழியில் மட்டுமே தமிழை காக்க முடியும். அதற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமே போராடி வருகிறது. என்றார். ஆர்ப்பாட்டத்தின் போது பதாகைகளை ஏந்தியவாறு பா. ஜனதாவினர் கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன், பரமேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமன் போஜராஜன், சபிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.