தென்காசியில் பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசியில் பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி
தமிழக அரசு தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் பால குருநாதன், அருள்செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story