ராணிப்பேட்டை, வாலாஜா பகுதிகளில் இன்று அறிவிக்கப்பட்ட மின்நிறுத்தம் ரத்து


ராணிப்பேட்டை, வாலாஜா பகுதிகளில் இன்று அறிவிக்கப்பட்ட மின்நிறுத்தம் ரத்து
x

ராணிப்பேட்டை, வாலாஜா பகுதிகளில் இன்று அறிவிக்கப்பட்ட மின்நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

சிப்காட், ராணிப்பேட்டை, வாலாஜா, ஒழுகூர் துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல், அக்ராவரம், வாணாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம், அம்மூர் பஜார், வேலம், அண்ணா நகர், எடப்பாளையம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி.மோட்டூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை மற்றும் வளவனூர், எசையனூர், அனந்தாங்கல், ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாக அலுவல் காரணங்களுக்காக இன்று அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.


Next Story