முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு


முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு
x

உத்தமபாளையம் அருகே முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

தேனி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் அசோக் (வயது 24). கடந்த 19-ந்தேதி இவர், உத்தமபாளையத்தை அடுத்த சடையாண்டி கோவில் அருகே முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனையடுத்து உத்தமபாளையம் தீயணைப்பு படையினர், அசோக்கை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சின்னமனூர் அருகே உள்ள எல்லப்பட்டி தடுப்பணை பகுதியில் 2 உடல்கள் கிடந்ததை உத்தமபாளையம் தீயணைப்பு படையினர் மீட்டனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த உடல்கள் அசோக் மற்றும் பெரியகுளத்தை சேர்நத ரவிச்சந்திரன் ஆகியோருடையது என்று தெரியவந்தது. உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் குளித்தபோது ரவிச்சந்திரன் தவறி விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே 2 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு முல்லைப்பெரியாற்றில் வீசப்பட்ட, கம்பம் கூலத்தேவர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (37) என்பவரின் உடலை தீயணைப்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story