தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு-கணவன் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு


தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு-கணவன் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு
x

தொளசம்பட்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு இறந்தார். போலீசுக்கு தெரியாமல் அவரது உடல் எரிக்கப்பட்டது தொடர்பாக கணவன் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம்

ஓமலூர்:

இளம்பெண் தற்கொலை

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி ராஜவீதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவருடைய மனைவி அகிலா (24). அகிலா, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் தொளசம்பட்டி சுடுகாட்டில் கணவன் குடும்பத்தினர் எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முத்துகிருஷ்ணன், தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தொளசம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

11 பேர் மீது வழக்கு

விசாரணையில், அகிலா தற்கொலை செய்து கொண்டதும், போலீசுக்கு தெரியாமல் அவரது உடலை உறவினர்கள் எரித்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக அகிலாவின் கணவர் பிரபாகரன், மாமனார் பாலகிருஷ்ணன், இருசாயி, ஜெகநாதன், இன்னொரு இருசாயி, அகிலாவின் தந்தை சண்முகம், தங்கை நவீனா, கோமதி, சூர்யா பிரகாஷ், வெங்கடாஜலம், சண்முகசுந்தரம் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் மீது ஓமலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஒப்புதல் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story