அரசு மருத்துவமனையில் மாயமானவர் காட்டுக்குள் பிணமாக மீட்பு
அரசு மருத்துவமனையில் மாயமானவர் காட்டுக்குள் பிணமாக மீட்கப்பட்டார்.
திருச்சி
மணப்பாறையை அடுத்த எப்.கீழையூரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 65). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் கடந்த 24-ந் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் அங்கு இருந்து மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அன்பு மேடு பகுதியில் உள்ள முள்காட்டில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக மணப்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் மருத்துவமனையில் இருந்து மாயமான ராஜகோபால் என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story