ரெயிலில் அடிபட்டு உடல் சிதறிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு


ரெயிலில் அடிபட்டு உடல் சிதறிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு
x

ஆம்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறிய நிலையில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் ரெயில் நிலையம் அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளம் அருகே தலை, கை, கால் மற்றும் உடல் துண்டான நிலையில் காட்பாடி-ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் மார்க்கத்தில் அவ்வழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தார் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இறந்தவர் உடல்கள் தலை, கை, கால் மற்றும் உடல் துண்டாகி சுமார் 100 அடி தொலைவில் தனித்தனியாக இருப்பதால் இறந்தவர் மர்மமான முறையில் இறந்தாரா?

அல்லது ஓடும் ரெயிலில் அடிபட்டு இறந்து இறந்தாரா? அல்லது ஓடும் ரெயிலில் தவறி விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story