தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் புதைப்பு


தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் புதைப்பு
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் புதைக்கப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தென்காசி

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள முகலிங்காபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் மனைவி அய்யம்மாள் (வயது 53). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக இதய நோய் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அய்யம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அய்யம்மாளின் உடலை அங்குள்ள இடுகாட்டில் குடும்பத்தினர் புதைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், அய்யம்மாளின் மகள் மாலதி (23), மாலதியின் கணவர் முருகன் (27), அய்யம்மாளின் சகோதரர் கருப்பசாமி (45) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story