Normal
நாய்கள் கடித்து சிறுவன் காயம்
சோளிங்கரில் நாய்கள் கடித்து சிறுவன் காயம் அடைந்தான்.
ராணிப்பேட்டை
சோளிங்கர்
சோளிங்கா் நகராட்சி 11-வது வார்டில் உள்ள அர்ஜுனரெட்டி தெருவை சோ்ந்தவா் சவுந்தா். இவருடைய மகன் நிதிஷ்வா்மன் (வயது 8). 2-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த நிதிஷ் வர்மனை தெருவில் சுற்றி திரிந்து கொண்டிருந்த நான்கு தெரு நாய்கள் துரத்தி, துரத்தி கை, கால், இடுப்பு போன்ற பகுதிகளில் கடித்து குதறியுள்ளது.
இதில் படுகாயடமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.
சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று வெறிநாய்கள் 50 பேரை கடித்து குதறியது. நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story