கார் மீது லாரி மோதி சிறுவன் காயம்
கார் மீது லாரி மோதி சிறுவன் காயம் அடைந்தார்.
தோகைமலை அருகே உள்ள சின்னரெட்டியபட்டியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சதீஷ் (வயது 31). சதீஷ்சின் மகன் தியா (5). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் சொந்த வேலை நிமித்தமாக மணப்பாறைக்கு குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் சின்னரெட்டியப்பட்டி பால் சொசைட்டி அருகே வடக்கில் இருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக தேவக்கோட்டையை சேர்ந்த கோட்டைசாமி (60) என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விமதாக கார் மீது மோதியது. இதில் காரின் பயணித்த தியா காயம் அடைந்தான். காயமின்ற ரவியும், சதீசும் உயிர் தப்பினர்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த தியாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சதீஷ் கொடுத்த புகாரின்பேரில், லாரி டிரைவர் கோட்டைசாமி மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.