கோபி அருகே மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்ற மணமக்கள்


கோபி அருகே மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்ற மணமக்கள்
x

கோபி அருகே மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலமாக சென்றனர்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலமாக சென்றனர்.

மணமக்கள்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மேவாணி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். பி.இ. பட்டதாரி. கோபி ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. பி.எஸ்சி. பட்டதாரி. இந்த நிலையில் ராமச்சந்திரனுக்கும், கிருஷ்ணவேணிக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து 2 பேருக்கும் கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று காலை திருமணம் நடந்தது. மணமக்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதனால் திருமணம் முடிந்ததும் மாட்டுவண்டியில் ஊர்வலமாக செல்லவேண்டும் என்று மணமக்கள் முடிவு செய்திருந்தனர்.

மாட்டு வண்டியில் ஊர்வலம்

இந்தநிலையில் திருமணம் மணமக்கள் கோவில் முன்பு தயாராக நின்றிருந்த மாட்டு வண்டியில் ஏறினார்கள். மாட்டு வண்டியை ஒருவர் ஓட்டினார். வண்டிக்கு பின்னால் உறவினர்கள் மற்ற வாகனங்களில் தொடர்ந்து சென்றனர். இதனை வீதிகளில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்தபடி சென்றனர். சுமார் 3 கி.மீ. தூரத்தை கடந்து மாட்டு வண்டி ஸ்ரீநகர் பகுதியில் உள்ள மணமகள் வீட்டை அடைந்தது. இதுகுறித்து மணமக்கள் கூறும்போது, 'நாங்கள் 2 பேரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பாரம்பரியத்தை உணர்த்தும் வகையிலும் புதுமணக்கோலத்தில் மாட்டு வண்டியில் சென்றோம்' என்றனர்.


Next Story