உடைந்த ஆற்றுப்பாலத்தை சீரமைக்க வேண்டும்


உடைந்த ஆற்றுப்பாலத்தை சீரமைக்க வேண்டும்
x

நெமிலி அருகே உடைந்த ஆற்றுப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த திருமால்பூரில் பனப்பாக்கம்-பள்ளுர் செல்லும் சாலையில் விருதசீர நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பனப்பாக்கம், திருமால்பூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து அரக்கோணம், காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை, பள்ளி, கல்லூரி செல்வோர் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

மேலும் இப்போது சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை பணிகள் அந்த பகுதியில் நடைபெற்றுவருவதால் கனரக வாகனங்கள் உடைந்த பாலத்தின் மீது செல்வதால் மேலும் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே உடைந்து ஆபத்தானநிலையில் உள்ள பாலத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story