தாய்மாமன் சீர் செய்வதில் தகராறு: தம்பியின் காதை அறுத்த கொடூர அண்ணன் கல்வராயன் மலையில் பரபரப்பு


தாய்மாமன் சீர் செய்வதில் தகராறு:  தம்பியின் காதை அறுத்த கொடூர அண்ணன்  கல்வராயன் மலையில் பரபரப்பு
x

தாய்மாமன் சீர்வரிசை செய்வதில் ஏற்பட்ட தகராறில் தம்பியின் காதை அவரது அண்ணன் கொடூரமாக அறுத்த சம்பவம் கல்வராயன் மலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி


கச்சிராயப்பாளையம்,


கல்வராயன் மலையில் உள்ள தொரடிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன்கள் கோவிந்தன் (வயது 46), ஜெயராமன் (40) ஆவார்கள். கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களது அக்கா ஒருவரின் இல்ல விழாவுக்கு தாய்மாமன் என்கிற முறையில் சீர்வரிசை செய்ய வேண்டியது இருந்தது. இதில் சீர்வரிசை பொருட்களை கோவிந்தன், ஜெயராமன் இருவரும் சேர்ந்து வாங்க வேண்டும். ஆனால், ஜெயராமன் தனது தரப்பில் இருந்து சீர்வரிசை பொருட்கள் வாங்க ஆகும் செலவு பணத்தை சரியாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

காதை அறுத்தார்

இதன் காரணமாக, அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தன் கொடுவாளை எடுத்து ஜெயராமனின் இடது பக்க காதை வெட்டினார். இதில் அவரது காது அறுந்து தனியாக தொங்கியதுடன், இடது பக்கம் கன்னத்திலும் கொடுவாள் வெட்டு விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் ஜெயராமன் மயங்கி விழுந்தார்.

உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரியாலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கைது

இதுகுறித்து ஜெயராமன் கரியாலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தனை கைது செய்தனர். தாய்மாமன் சீர் செய்வதில் ஏற்பட்ட தகராறில் தம்பியின் காதை அண்ணன் கொடூரமாக அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story