பள்ளத்தில் விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு


பள்ளத்தில் விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு
x

பள்ளத்தில் விழுந்த கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

பள்ளத்தில் விழுந்த கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கங்கையம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் ராம் (வயது 41). கட்டிட மேஸ்திரி. மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டு அருகே உள்ள வராவதி பள்ளத்தில் விழுந்து விட்டார்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமின் சகோதரர் குமார் கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story