மரத்தில் பஸ் மோதியது; 11 பேர் காயம்
மரத்தில் பஸ் மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்
மதுரை
உசிலம்பட்டி
தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பஸ் உசிலம்பட்டி அருகே நோட்டம்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலக்கோட்டையைச் சேர்ந்த விஜயா, சுப்பையா, தத்தனேரியை சேர்ந்த காயத்திரி, ஆண்டிபட்டியை சேர்ந்த காவேரி, ஹரிகிருஷ்ணன், ராசு, தேனியை சேர்ந்த பஞ்சவர்ணம், கோபால் உள்பட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story