60 பேருடன் வந்த பஸ் மோதி, டிரான்ஸ்பார்மர் நொறுங்கியது
கோவிலுக்கு வந்துவிட்டு 60 பேருடன் ஊர் திரும்பிய பஸ் திடீரென மோதியதில் டிரான்ஸ்பார்மர் ெநாறுங்கியது. அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர். அதில் 41 பேர் காயம் அடைந்தனர்.
கமுதி,
கோவிலுக்கு வந்துவிட்டு 60 பேருடன் ஊர் திரும்பிய பஸ் திடீரென மோதியதில் டிரான்ஸ்பார்மர் ெநாறுங்கியது. அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர். அதில் 41 பேர் காயம் அடைந்தனர்.
டிரான்ஸ்பார்மர் மீது கோவிலுக்கு வந்துவிட்டு 60 பேருடன் ஊர் திரும்பிய பஸ் திடீரென மோதியதில் டிரான்ஸ்பார்மர் ெநாறுங்கியது. அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர். அதில் 41 பேர் காயம் அடைந்தனர்.மோதல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த உறவினர்கள் 60 பேர் ஒரு பஸ்சில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, நேற்று முன்தினம் இரவு மீண்டும் பஸ்சில் மானாமதுரை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
கமுதி அருகே அபிராமத்தை அடுத்துள்ள முத்தாதிபுரம் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது ேவகமாக மோதி கவிழ்ந்தது.
இதில் டிரான்ஸ்பார்மர் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் உயிர் தப்பினர்.
41 பேர் படுகாயம்
இருப்பினும் இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 8 சிறுவர்-சிறுமியர் உள்ளிட்ட 41 பேர் காயம் அடைந்தனர். பஸ்சில் இருந்தவர்களின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்்தனர்.
தகவல் அறிந்து கமுதி மற்றும் அபிராமம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன.
கமுதி தீயணைப்பு படையினரும், அபிராமம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பஸ் டிரைவர் செல்லம் (வயது 56) மேல் சிசிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியிலும், சந்தீப்வர்ஷன் (13) என்ற சிறுவன் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.