விருத்தாசலம் அருகேதறிகெட்டு ஓடிய பஸ் ஓடையில் கவிழ்ந்தது; ஒருவர் படுகாயம்


விருத்தாசலம் அருகேதறிகெட்டு ஓடிய பஸ் ஓடையில் கவிழ்ந்தது; ஒருவர் படுகாயம்
x

விருத்தாசலம் அருகே தறிகெட்டு ஓடிய பஸ் ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் படுகாயமடைந்தார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் இருந்து நேற்று மதியம் தனியார் பஸ் 6 பயணிகளுடன் கருவேப்பிலங்குறிச்சி வழியாக காவனூர் நோக்கி சென்ற கொண்டிருந்தது. கொடுமனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அப்பகுதியில் பெய்த மழையால் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரம் உள்ள ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு பயணியை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டிரைவர், கண்டக்டர் உள்பட 7 பேரும் காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story