டயர் வெடித்து சாலை தடுப்பில் ஓடிய பஸ்


டயர் வெடித்து சாலை தடுப்பில் ஓடிய பஸ்
x

போடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் 35 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் பகுதியில் வந்தபோது, முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலை, நடுவில் உள்ள தடுப்பில் மோதியது.

மதுரை

போடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் 35 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் பகுதியில் வந்தபோது, முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலை, நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. இதையடுத்து டிரைவர் சசிக்குமார் சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையின் நடுவே உள்ள தடுப்பின் வழியாகவே 100 மீட்டர் தூரம் வரை பஸ்சை ஓட்டி கவிழ்ந்து விடாமல் பத்திரமாக நிறுத்தினார். இதனால் பஸ்சில் பயணித்த பயணிகள் காயமின்றி தப்பினர்.


Related Tags :
Next Story