கால்வாயை தூர்வார வேண்டும்


கால்வாயை தூர்வார வேண்டும்
x
தினத்தந்தி 10 July 2023 12:35 AM IST (Updated: 10 July 2023 2:26 PM IST)
t-max-icont-min-icon

கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்-சேலம் மெயின் ரோட்டில் எஸ்.ஏ.எஸ். நகர், அன்பு நகர் ஆகிய பகுதிகளில் மெயின் ரோட்டையொட்டி கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கல்வாய் தூர்ந்து போய் உள்ளது. இதனால் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story