தடுப்புச்சுவர் மீது கார் மோதி கவிழ்ந்தது
ஏளகிரி மலையில் தடுப்புச்சுவர் மீது கார் மோதி கவிழ்ந்தது. இதில் தி.க. மாநில செயலாளர் காயத்துடன் உயிர் தப்பினார்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் நகராட்சி 7-வது வார்டு லண்டன் மிஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் கே.சி.எழிலரசன். இவர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் சகோதரர் ஆவார். மேலும் திராவிடர் கழக மாநில செயலாளராக உள்ளார். இந்தநிலையில் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலைக்கு காரில் சென்றுள்ளார். முதல் வளைவில் சென்றபோது தடுப்புச் சுவரின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் எழிலரசன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீசார் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்னர். பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story