பஸ் மீது மோதி கொய்யா தோட்டத்துக்குள் புகுந்த கார்
பஸ் மீது மோதி கொய்யா தோட்டத்துக்குள் கார் புகுந்தது.
மதுரை
உசிலம்பட்டி,
தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த விஜயசாரதி, கோபால், பஞ்சு ஆகியோர் காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். உசிலம்பட்டி அருகே நோட்டம்பட்டி எனும் இடத்தில் வந்த போது திடீரென காரின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி, சாலையோர கொய்யா தோட்டத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த 3 பேர், பஸ்சில் பயணித்த வருசநாடு பகுதியை சேர்ந்த பெரியமணி, நிவாஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story