கார், முதியவர் மீது மோதி கார் மோதி விபத்து
திருப்பத்தூரில் கார் மற்றும் முதியவர் மீது மோதிய காரை ஓட்டிவந்த போதை டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
திருப்பத்தூரில் கார் மற்றும் முதியவர் மீது மோதிய காரை ஓட்டிவந்த போதை டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கார், முதியவர் மீது மோதல்
ஜோலார்பேட்டையில் இருந்து நேற்று இரவு 8 மணி அளவில் ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அதி வேகமாக வந்த கார் நுகர்பொருள் வாணிபக்கழகம் அருகே ஒரு கார் மீது மோதியது. பின்னர் அங்கிருந்து நிற்காமல் வேகமாக சென்ற கார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே மூதியவர் மீது மோதியது. இதில் முதியவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அப்போதும் கார் நிற்காமல் சென்றது.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் துரத்தி சென்று திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே காரை மடக்கி பிடித்தனர். அப்போது கார் டிரைவர் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை அடித்து வெளியே இழுத்தனர்.
தர்ம அடி
அதற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் காரை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி பார்த்தபோது காரின் பின் சீட்டில் குடிபோதையில் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரையும் வெளியே இழுத்துப் போட்டு அடித்தனர். அதற்குள் காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து காரை பறிமுதல் செய்து, குடிபோதையில் இருந்தவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.