10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்


10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிறந்தநாள் கொண்டாடிவிட்டு திரும்பியபோது 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் பகுதியை சேர்ந்த சுனில் (வயது 31). இவர் அந்த பகுதியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். அவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதை கொண்டாடுவதற்காக தனது கடையில் வேலை பார்க்கும் சக ஊழியர்களான நந்து(21), நஜ்மல்(20), ஷான்(25) ஆகியோருடன் காரில் புறப்பட்டு நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியில் அன்று மாலையில் சூரிய அஸ்தமனத்தை பார்த்து விட்டு பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

பின்னர் நேற்று காலையில் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டனர். காரை நந்து ஓட்டினார். கார் சுசீந்திரம் அருகே பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாரி சாலையோரத்தில் 10 அடி பள்ளத்தில் இருந்த வயலில் தலைகீழாக பாய்ந்தது. அப்போது காரில் இருந்த 4 பேரும் அலறினார்கள். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் சுசீந்தரம் போலீசார் ஆகியோர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். பின்னர், படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story