கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து


கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
x

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கழனிவாசல் மெயின் ரோட்டை சோ்ந்தவர் ஸ்ரீமான் (வயது 44). கெமிக்கல் என்ஜினீயரான இவர் நேற்று காலை காரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் சென்று கொண்டிருந்த போது, ஸ்ரீமானின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மைய தடுப்பு சுவரில் மோதி சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயமடைந்த ஸ்ரீமானை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு காரை அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story