தானாக ஓடி பள்ளத்தில் இறங்கிய காரால் பரபரப்பு


தானாக ஓடி பள்ளத்தில் இறங்கிய காரால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தானாக ஓடி பள்ளத்தில் இறங்கிய காரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை பகுதியை சேர்ந்தவர் ராஜ்கமல் (வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு மின்சாரத்தில் இயங்கும் புதிய காரில் கோவில்பட்டிக்கு வந்துள்ளார். பசுவந்தனை சாலையில் ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு அவர் உணவு வாங்க சென்றுள்ளார். அவர் உள்ளே உணவு வாங்கிக் கொண் டிருந்தபோது, திடீரென கார் நகர்ந்து தானாக ஓடியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் சிதறி ஓடினர். தொடர்ந்து அந்த கார் சுமார் 200 அடி தூரம் தானாக ஓடிச்சென்று அப்பகுதியில் இருந்த கழுவுநீர் ஓடையில் இறங்கி நின்றது. கார் இதனால் அப்பகுதி யில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் அப்பகுதிக்கு ெசன்று விசாரணை நடத்தினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் மீட்பு வாகனம் மூலம் மீட்க ஓடையில் இருந்த காரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.


Next Story