வயலுக்குள் பாய்ந்த கார்


வயலுக்குள் பாய்ந்த கார்
x

கொட்டாம்பட்டி அருகே உள்ள அம்பலகாரன்பட்டி விலக்கு திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு விலகி வயலில் பாய்ந்தது.

மதுரை

கொட்டாம்பட்டி,

தெலுங்கானாவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 5 பேர் சபரிமலைக்கு காரில் வந்துள்ளனர். சாமி தரிசனம் முடித்து விட்டு மீண்டும் தெலுங்கானாவுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கொட்டாம்பட்டி அருகே உள்ள அம்பலகாரன்பட்டி விலக்கு திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு விலகி வயலில் பாய்ந்தது. அப்பகுதியை சேர்ந்த மக்கள் விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டனர்.காரில் இருந்த 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story