ஓடும் காரில் திடீர் தீ


ஓடும் காரில் திடீர் தீ
x

ஓடும் காரில் திடீர் தீ

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் செந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி(வயது 40). இவர் தனக்கு சொந்தமான காரில் பல்லடத்தில் இருந்து வதம்பச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லடம்-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வெங்கிட்டாபுரம் அருகே சென்ற போது காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் காரை நிறுத்தி இறங்கி சென்று பார்க்க முயன்ற போது திடீரென காரின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து பல்லடம் தீயணைப்பு படையினருக்கும், காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதற்குள் காரின் பெரும்பாலான பகுதி தீயில் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story