செல்போன் பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் செல்போன் பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் செல்போன் பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் பறிப்பு
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த செல்லையா மகன் சந்திரசேகரன் (வயது 48). இவர் கடந்த 20-ந் தேதி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மில்லர்புரம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் சந்திரசேகரனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவருடைய செல்போனை பறித்துச் சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த பகத்சிங் மகன் கலையரசன் (20), தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ராஜ்குமார் (27) ஆகிய 2 பேரும் சேர்ந்து செல்போன் பறித்து சென்றது தெரியவந்தது.
2 பேர் கைது
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து கலையரசன் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூ.39 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ேமாட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.