நகராட்சி பள்ளியில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
அரக்கோணத்தில் உள்ள நகராட்சி பள்ளியில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் அங்கு நடந்த வகுசுப்பறையானது திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டது.
அரக்கோணத்தில் உள்ள நகராட்சி பள்ளியில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் அங்கு நடந்த வகுசுப்பறையானது திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டது.
நடுநிலைப்பள்ளி
அரக்கோணம்- காவனூர் ரோட்டில் போலாட்சி அம்மன் கோவில் நகராட்சி நடு நிலைப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஒரு வகுப்பறையில் ஒன்றாம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் 50 மாணவர்கள் 14-ந் தேதி உட்கார வைக்கப்பட்டிருந்தனர். மதிய உணவு இடை வேளைக்காக மதியம் 12.30 மணிக்கு மாணவர்கள் வெளியே வந்து விட்டனர்.
அப்போது அந்த வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு சுமார் 4 அடி அகலத்துக்கு பெயர்ந்து கீழே விழுந்தது. மாணவ, மாணவிகள் உணவு இடைவேலைக்காக வெளியே சென்றதால் அதிர்ஷ்ட வசமாக ஆபத்தில் இருந்து தப்பினர்.
மாற்று ஏற்பாடு
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி, ஆணையர் லதா, பொறியாளர் ஆசீர்வாதம், வட்டார கல்வி அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் வகுப்பறையை பார்வையிட்டு, மாணவர்களுக்கான வகுப்பறையை தற்காலிகமாக அருகில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.