நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை- ப.சிதம்பரம்


நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை- ப.சிதம்பரம்
x

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு அசைந்து கொடுப்பது போன்று எனக்குத் தெரியவில்லை என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் கூறியதாவது ,

ஆங்கிலத்தில் சட்டம் இருக்கும் போது ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்க வேண்டும். ஆங்கிலத்தில் தான் வரைவு சட்டம் தயார் செய்யப்படுகிறது. ஆங்கிலத்தில் சட்டத்தை இயற்றிவிட்டு பெயர் மட்டும் ஹிந்தியில் வைக்கிறார்கள்.

நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்பது நியாயமே. திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்பதற்கான பல காரணங்களை நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.மத்திய அரசு அசைந்து கொடுப்பது போன்று எனக்குத் தெரியவில்லை.

ஒவ்வோரு ஆண்டும் மனிதர்களுக்கு வயது கூடுவதைப் போல, நாட்டின் பொருளாதாரமும், வருமானமும் கூடிக் கொண்டேதான் இருக்கும். சில ஆண்டுகள் குறைந்த அளவில் வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.


Next Story