தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு பார்க்கிறது - அமைச்சர் உதயநிதி


தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு பார்க்கிறது - அமைச்சர் உதயநிதி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 23 Dec 2023 7:03 PM IST (Updated: 23 Dec 2023 7:05 PM IST)
t-max-icont-min-icon

மாநில அரசை குற்றஞ்சாட்டி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியல் செய்கிறார்.

சென்னை,

சென்னை பிராட்வே தொன்போஸ்கோ பள்ளி கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது,

தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு பார்க்கிறது . பேரிடர் பாதிப்புக்காக ரூ.21,700 கோடி இழப்பீடு கேட்டும் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.

தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு எந்த மத்திய அமைச்சராவது அல்லது பாஜக தேசிய தலைவர்களாவது வந்தனரா?. மாறுபட்ட ஆட்சி நடப்பதால் தமிழக மக்களுக்கு உதவ மத்திய அரசுக்கு மனமில்லை.

மழைநீர் வடிகால் அமைக்க மத்திய அரசு நிதி தரவைல்லை. மாநில அரசின் நிதியில் தான் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. மாநில அரசை குற்றஞ்சாட்டி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியல் செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story