உளுந்தூர்பேட்டை ஏழுமலையான் கோவிலில் வாசற்கால் நிறுவும் நிகழ்ச்சி முன்னாள் எம்எல்ஏ குமரகுரு தலைமையில் நடந்தது


உளுந்தூர்பேட்டை ஏழுமலையான் கோவிலில் வாசற்கால் நிறுவும் நிகழ்ச்சி முன்னாள் எம்எல்ஏ குமரகுரு தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை ஏழுமலையான் கோவிலில் வாசற்கால் நிறுவும் நிகழ்ச்சி முன்னாள் எம்எல்ஏ குமரகுரு தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி

திருவெண்ணெய்நல்லூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருச்சி-சென்னை-சேலம் சந்திப்பு ரவுண்டானா அருகே திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.40 கோடி செலவில் ஏழுமலையான் (ஸ்ரீவெங்கடேஸ்வர சாமி) கோவில் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் மூலஸ்தான கட்டிடத்துக்கு வாசற்கால் நிறுவும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மூலஸ்தானத்திற்கான வாசற்காலுக்கு திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ஸ்ரீதர் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இரா.குமரகுரு தலைமையிலும், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையிலும் வாசற்கால் நிறுவப்பட்டது.

வளர்ச்சி பெறும்

தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு கூறுகையில், ரூ.40 கோடி செலவில் இங்கு கட்டப்படும் ஏழுமலையான் கோவிலில் ராஜகோபுரம், திருமண மண்டபம், அன்னதான மண்டபம், விருந்தினர் மாளிகை, விநாயகர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, குளம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் வடிவமைப்பில் அனைத்து வசதிகளுடன் இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட உள்ளது. இதனால் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்ல இருப்பதால் உளுந்தூர்பேட்டை பகுதி வளர்ச்சி பெறும் என்றார். இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரம தலைவர் யத்தீஸ்வரி ஆத்ம விகாசப்பிரிஅம்மா, ஐ.ஜே.கே. மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன், விருத்தாசலம் ஜெயின் ஜீவல்லரி அகர்சந்த், கள்ளக்குறிச்சி சத்யா சுவீட்ஸ் முரளி, தொழிலதிபர்கள் நடராஜன், அம்பிகாபதி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகர செயலாளர் துரை, விநாயகா கல்வி குழும தலைவர் நமச்சிவாயம், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் சாய்ராம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், சம்பத் அய்யர், வக்கீல்கள் பக்கிரிசாமி, ராவணன், அன்பழகன், மோகன்ராஜ், திலீப், நகர துணைத் தலைவர் கோபால், தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சாய்அருண் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story