லூர்து அன்னை ஆலய தேர் பவனி


லூர்து அன்னை ஆலய தேர் பவனி
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு லூர்து அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறில் லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 9-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் தீபாராதனை, நற்கருணை, திருப்பலி, சொற்பொழிவுகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை4.30 மணி முதல் 7 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. காலை 8 மணிக்கு பங்குத்தந்தை எரிச்சோ தலைமையில் பல்வேறு சரக பங்குத்தந்தைகள் சொற்பொழிவு ஆற்றினர். இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு ஆலயம் முன்பு இருந்து லூர்து அன்னை தேர் பவனி தொடங்கியது. வழி நெடுகிலும் கிறிஸ்தவர்கள் திரண்டிருந்து வழிபாடு நடத்தினர். மாலை 3 மணிக்கு தேர் நிலைக்கு நின்றது.


Next Story