முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என தேவராஜி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் ரூ.109.72 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29-ந் தேதி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அந்தந்த தொகுதி சார்பில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அதன்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.