பாட்டியுடன் சென்ற குழந்தை குளத்தில் தவறி விழுந்து பலி
கலவை அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்றுவிட்டு, பாட்டியுடன் வீட்டுக்கு சென்ற குழந்தை குளத்தில் மூழ்கி பலியானது.
கலவை அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்றுவிட்டு, பாட்டியுடன் வீட்டுக்கு சென்ற குழந்தை குளத்தில் மூழ்கி பலியானது.
அங்கன் வாடிக்கு...
ராணிப்போட்டை மாவட்டம் கலவையை அடுத்த வேம்பி கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் கேசவன். இவருக்கு 2 வயதில் நவீன் குமார் என்ற ஆண் குழந்தை இருந்தது. அங்குள்ள அங்கன்வாடி மையத்துக்கு குழந்தை நவீன்குமார் சென்றுவந்தான். இன்த அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மதியம் 12.40 மணியளவில் அனைத்து குழந்தைகளுக்கும் உணவு வழங்கி, அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நவீன் குமார், பாட்டி உண்ணாமலை இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
உண்ணாமலை மற்றொரு குழந்ததையையும் அழைத்து சென்றுள்ளார். அந்த குழந்தையை கையில்பிடித்துக் கொண்டு சென்றுள்ளார். அவருடைய பேரன் நவீன்குமார் பின்னால் நடந்து சென்றுள்ளார். அங்குள்ள குளக்கரை வழியாக உண்ணாமலை குழந்தைகளை அழைத்து சென்றார்.
குளத்தில் மூழ்கி பலி
சிறிது தூரம் சென்று பார்த்தபோது பின்னால் வந்த நவீன்குமாரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை தேடியபோது குளத்து தண்ணீரில் நவீன்குமார் தவறிவிழுந்தது தெரியவந்தது. இதனால் அவர் கூச்சலிட்டார். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிசென்று குழந்சதையை மீட்டனர்.
பின்னர் உடனடியாக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. இது குறித்து கலவை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.