மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
சேலம்
எடப்பாடி:
கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சாணாரப்பட்டியில் உள்ள நீர்வழிப் பாதை மற்றும் மயான நிலத்தை ஒட்டிய இடங்களில் இருந்து, நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் இருந்து அதிக அளவிலான மண் எடுக்கப்பட்டதால் அங்குள்ள விவசாய நிலங்கள் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும், சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்தனர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வரும் காலங்களில் மண் அள்ளப்படாது என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story