செஸ் ஒலிம்பியாட் தீப பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் தீப பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார் - 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபம் கொண்டு வரப்பட்டது.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் தீப பேரணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி கருப்பு வெள்ளை பலுன்களை பறக்க விட்ட தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வாணியம்பாடி சாலை வழியாத தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.
அதைத்தொடர்ந்து ஒலிம்பியாட் தீபத்தை செஸ் விளையாட்டு மாணவர்களிடம் வழங்கப்பட்டு அவவ்கள் தீபத்தை ஏந்தி சென்று 21 சுற்றுகள் விளையாட்டு மைதானத்தை சுற்றி வந்தனர்.
மேலும் கல்லூரி வளாகத்தில் சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் முன்னிட்டு மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
அதனைத் தொடர்ந்து ஒலிம்பியாட் தீபத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதியிடம் வழங்கினார்.
பின்னர் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 தாலுகா அலுவலகங்களுக்கு தீபம் எடுத்து செல்லப்பட்டது. தீபத்துக்கு மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் வரவேற்பு அளித்தனர்,
முன்னதாக திருப்பத்தூர் கல்லூரியில் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற பெற்ற 12 மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரமேலதா, தாசில்தார்கள் சிவப்பிரகாசம், பூங்கொடி, சம்பத், பழனி, மகாலட்சுமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.