குடவாசலில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குத்துவிளக்கு ஏற்றினார்
குடவாசலில் ரூ.3.17 கோடியில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் கலெக்டர் சாருஸ்ரீ குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
குடவாசல்:
குடவாசலில் ரூ.3.17 கோடியில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் கலெக்டர் சாருஸ்ரீ குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
புதிய ஊராட்சி கட்டிடம்..
குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடம் ரூ.3 கோடியே 17 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை நேற்று காலை 10.30 மணிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து காலை 10:35 மணிக்கு குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தார். அதையடுத்து ஒன்றிய குழு தலைவர்கள் கிளாராசெந்தில் (குடவாசல்), சோம.செந்தமிழ் செல்வன் (நீடாமங்கலம்) உள்ளிட்ட 10 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு அரசு பணிகள் தொய்வின்றி நடக்க அரசின் சார்பில் புதிய ஜீப்பையும், அதற்கான சாவியினை கலெக்டர் வழங்கினார்.
அரசு துறை அதிகாரிகள்
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சங்கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்திரா, தாசில்தார் குருநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன், குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பா.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒன்றியக்குழு துணை தலைவர் தென்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.