இலங்கை தமிழர்களுக்கு ரூ.3¾ கோடியில் வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு


இலங்கை தமிழர்களுக்கு ரூ.3¾ கோடியில் வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு
x

இலங்கை தமிழர்களுக்கு ரூ.3¾ கோடியில் வீடுகள் கட்டும் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

இலங்கை தமிழர்களுக்கு ரூ.3¾ கோடியில் வீடுகள் கட்டும் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்க வந்தார். இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், குடிநீர் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஆவாஸ் விகாஸ் திட்டம், பணிகள், பள்ளிகளின் சுற்றுச்சூழல் வசதி, வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், நீர்வரத்து கால்வாய் தூர்வாருதல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்து அவற்றை விரைந்து மடிக்க உத்தரவிட்டார்.

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு கனமழையின் காரணமாக எந்தெந்த நிலையங்களில் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்பட்டது என்பது குறித்து கண்டறிந்து அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்க வேண்டும்.

துத்திப்பட்டு, தேவலாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலை புறம்போக்கு இடங்களை நில அளவை செய்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுரைகள் வழங்கினார்.

மின்னூரில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் 76 வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைறந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுரைகள் வழங்கினார்.பின்னர் சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி கிரீன் குட்டை பகுதியில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டுவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வில்வநாதன் எம்.எல்.ஏ., மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தர பாண்டியன், உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், தாசில்தார் மகாலட்சுமி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story