பொதுமக்களிடம் மனு வாங்கிய கலெக்டர்


பொதுமக்களிடம் மனு வாங்கிய கலெக்டர்
x

திருப்பரங்குன்றம் தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தியில் கலெக்டர் அனிஷ்சேகர் பொதுமக்களிடம் மனு வாங்கினார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தியில் கலெக்டர் அனிஷ்சேகர் பொதுமக்களிடம் மனு வாங்கினார்.

ஜமாபந்தி

மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் தாலுகா உள்பட 11 தாலுகாவில் வருவாய் தீர்வாயம் - தணிக்கை எனப்படும் ஜமாபந்தி நேற்று தொடங்கி நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு தாசில்தார் அனீஸ்சத்தார் வரவேற்றார். மண்டல துணை தாசில்தார்கள் ராஜேஷ், மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனு வாங்கினார். காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரை சுமார் 3 மணி வரை வரிசையில் வந்த மக்களிடம் மனுக்கள் வாங்கி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

10 பேருக்கு முதியோர் உதவித்தொகை

இதற்கிடையில் முதல் நாளுக்கு உரிய திருப்பரங்குன்றம், நிலையூர் 2 பிட் - குரூப், வாலனேந்தல் -குரூப், புதுக்குளம் 3- பிட் குரூப், சூரக்குளம்- குரூப், தோப்பூர், கோ.புதுப்பட்டி (என்ற) ஆஸ்டின்பட்டி பகுதி மக்கள் 72 பேர் பட்டாமாறுதல், அத்துமால், பரப்பு திருத்தம் தலா 2 பேர், பட்டா மாறுதல் மேல்முறையீடு 8 பேர், இலவச வீட்டு மனை பட்டா கோரி 21 பேர், தோராய பட்டா கோரி 17 பேர், விதவை உதவித்தொகை கோரி 11 பேர், முதியோர் உதவித்தொகை 3 பேர் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 168 பேர் மனு கொடுத்தனர். இதில் 10 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக உடனடியாக கலெக்டர் அனீஷ்சேகர் சான்றிதழ் வழங்கினார்.

மேற்கு தாலுகா

மதுரை மேற்கு தாலுகாவில் ஜமாபந்தி நடைபெற்றது. தாசில்தார் நாகராஜன் வரவேற்றார். மண்டல துணை தாசில்தார் வீரக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கோட்டூர் சாமி தலைமை தாங்கி பொதுமக்களிடையே மனுக்கள் பெற்றார்.அதில் 56 மனுக்கள் பெறப்பட்டது. 4 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story