சாலையோரம் மயங்கி கிடந்த முதியவரை சிகிச்சைக்கு அனுப்பிவைத்த கலெக்டர்
மயிலாடுதுறையில் சாலையோரம் மயங்கி கிடந்த முதியவரை சிகிச்சைக்கு கலெக்டர் அனுப்பிவைத்தார்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கலெக்டர் லலிதா நேற்று வைத்தீஸ்வரன்கோவில் பகுதிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சோழசக்கரநல்லூர் என்ற இடத்தில் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை பார்த்தார். பின்னர் காரில் இருந்து இறங்கி வந்து முதியவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். நேற்று மாலை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சையில் இருந்த அந்த முதியவரின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் முதியவரின் உறவினர்களை அடையாளம் காணவேண்டும் இல்லை என்றால் காப்பகத்திற்கு அழைத்துசென்று பராமரிக்க வேண்டும் என்று ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அவருடன் இணை இயக்குனர் குருநாதன், தலைமை டாக்டர் செந்தில்குமார், முதியோர் உதவிமையம் களபொறுப்பாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story