ஓடும் அரசு பஸ்சில் கண்டக்டருக்கு திடீர் நெஞ்சுவலி


ஓடும் அரசு பஸ்சில் கண்டக்டருக்கு திடீர் நெஞ்சுவலி
x

திண்டிவனத்தில் ஓடும் அரசு பஸ்சில் கண்டக்டருக்கு திடீர் நெஞ்சுவலி ஆஸ்பத்திரியில் அனுமதி

விழுப்புரம்

திண்டிவனம்

சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தடம் எண்-121 சி என்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(வயது 47) என்பவர் பஸ்சை ஓட்டினார். புதுச்சேரியை அடுத்த திருக்கனூரை சேர்ந்த ஜெயபாலன்(52) கண்டக்டராக பணியில் இருந்தார். திண்டிவனம் புறவழி சாலையை பஸ் கடந்த போது ஜெயபாலனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பணியை செய்து கொண்டிருந்தார். திண்டிவனத்தை அடுத்த கொள்ளார் மெயின்ரோடில் பஸ் வந்தபோது நெஞ்சு வலி அதிகமானதை அடுத்து அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து டிரைவர் சுப்பிரமணி பஸ்சை ஓரமாக நிறுத்தினார். பின்னர் பயணிகள் உதவியுடன் ஜெயபாலனை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ்களில் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஓடும் அரசு பஸ்சில் கண்டக்டருக்கு திடீரென மயங்கி விழுந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story