அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை எம்.எல்.ஏ. ஆய்வு


அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை எம்.எல்.ஏ. ஆய்வு
x

சொக்கலிங்கபுரத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சொக்கலிங்கபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ, கட்டிட பணிகள் தரமான முறையில் கட்டப்படுகிறதா என ஆய்வு செய்தார். கருங்குளம் யூனியன் ஆணையாளர் பாக்கியலீலா, கூடுதல் ஆணையாளர் செல்வி, யூனியன் உதவி பொறியாளர் சித்திரைசேகர், மேற்பார்வையாளர் சீனிவாசன், பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி உட்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள நூலகத்திற்கு சென்று எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். அப்போது நூலகத்தில் புத்தகம் இருப்பு குறித்து நூலகரிடம் கேட்டறிந்து கூடுதலாக இளைஞர்களுக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார். முன்னதாக சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பால் உற்பத்தி கூடத்தை எம்.எல்.ஏ ஆய்வு செய்து கட்டிடம் தரமான கட்டிடமாக கட்ட ஒப்பந்தகாரரிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து கீழ பூவாணி, மேல பூவாணி ஆகிய கிராமங்களுக்கு சென்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


Next Story