தூக்கில் தொழிலாளி பிணம்


தூக்கில் தொழிலாளி பிணம்
x

மூங்கில்துறைப்பட்டு அருகே தூக்கில் தொழிலாளி பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா?என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைபட்டு,

சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜா (வயது 42) விவசாய கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவி பூங்கொடியிடம் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். இந்த நிலையில் மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லா புரத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் ராஜா பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப-் இன்ஸ்பெக்டர் பசலைராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

பின்னர் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story