குடிசை தீயில் எரிந்து நாசம்


குடிசை தீயில் எரிந்து நாசம்
x

குடிசை தீயில் எரிந்து நாசமானது.

கரூர்

கந்தம்பாளையம் அருகே மலைநகர் பகுதியை சேர்ந்தவர் விவேக் (வயது 45). விவசாயி. இவர் கவுண்டன்புதூர் அருகே ஒரம்புப்பாளையம் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் நாட்டுக்கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். அதன் அருகே குடிசை வீடு கட்டி தொழிலாளர்கள் அங்கு குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் தொழிலாளர்கள் குடியிருந்த வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, குடிசை வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் குடிசை வீட்டில் இருந்த டிவி, சமையல் பாத்திரங்கள், உணவுப் பொருட்கள், துணிமணிகள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.


Related Tags :
Next Story