குடிசை தீயில் எரிந்து நாசம்


குடிசை தீயில் எரிந்து நாசம்
x

கறம்பக்குடி அருகே குடிசை தீயில் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள செங்கொல்லை நெய்வேலி வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, விவசாயி. இவரது குடிசை வீட்டில் நேற்று திடீரென தீப்பற்றியது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொளுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் குடிசையின் ஒரு பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் தீயில் கருகி சேதமானது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story