நாட்டு மாங்காய் விளைச்சல் அமோகம்


நாட்டு மாங்காய் விளைச்சல் அமோகம்
x

நாட்டு மாங்காய் விளைச்சல் அமோகம் உள்ளது.

புதுக்கோட்டை

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு நாட்டு மாங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இப்பகுதிகளில் நாட்டு மா மரங்கள் மற்றும் ஒட்டு மா மரக்கன்றுகளை எண்ணற்ற விவசாயிகள் தங்களது வீடு மற்றும் தோட்டங்களில் வைத்து பராமரித்து வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் ஒட்டு மாங்காய்களை விட நாட்டு மாங்காய் அமோகமான விளைச்சல் கண்டுள்ளது. கடந்த மாதங்களில் ஒரு மாங்காய் ரூ.20 வரை விற்பனை ஆகி வந்த நிலையில், தற்போது மாங்காய் விளைச்சல் அதிகரித்து வர தொடங்கி இருக்கும் நிலையில், ஒரு மாங்காய் ரூ.5-க்கும், ஒரு சில காய்கறி கடைகளில் காய்கறிகள் வாங்குவோருக்கு இலவசமாக கூட மாங்காய்களை கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Next Story