காதல் திருமணம் செய்த 15 நாளில் தம்பதி விஷம் குடித்தனர்


காதல் திருமணம் செய்த 15 நாளில் தம்பதி விஷம் குடித்தனர்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த 15 நாளில் தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

விருதுநகர்

ராஜபாளையம்

காதல் திருமணம் செய்த 15 நாளில் தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதல் திருமணம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் விஜய் (வயது 23).

இவரும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பரமசிவன் மகள் கலையரசியும் (19) காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதை கலையரசியை அவருடைய பெற்றோர் கண்டித்தனர்.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எனவே 15 நாட்களுக்கு முன்பு விஜய்யும், கலையரசியும் வீட்டைவிட்டு வெளியேறி திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

தற்கொலைக்கு முயற்சி

பின்னர் ராஜபாளையம் அருகே முகவூரில் விஜய்யின் பாட்டி வீட்டில் வசித்து வந்தனர். ஆனால், அவர்களுக்கு பெற்றோர் தரப்பில் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

எனவே மனவருத்தம் அடைந்த புதுமண தம்பதியினர், விபரீதமாக முடிவு எடுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு போராடிய அவர்களை மீட்டு, ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, தற்கொலைக்கு முயன்ற தம்பதி எழுதியதாக கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியதாகவும், அதில், எங்களை பெற்றோர் மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story